/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பறக்கும் படை சோதனையில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படை சோதனையில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 19, 2024 05:50 AM
தேனி: தேனி - மதுரை ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.5.77 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள்முதல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. மாவட்டம் முழுவதும் 36 பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை கூட்டுறவு சார்பதிவாளர் அழகர்ராஜா தலைமையிலான குழுவினர் மதுரை ரோட்டில் கருவேல்நாயக்கன்பட்டி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தினர்.
அப்போது ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெருமாள் 53, டூவீலரில் தேனிக்கு சென்றார்.
அவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் ரூ.5.77 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

