/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தலைமையாசிரியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை திருட்டு
/
தலைமையாசிரியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை திருட்டு
ADDED : ஆக 13, 2025 02:16 AM
-பெரியகுளம்: பெரியகுளம் பங்களாபட்டி அண்ணாநகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் 57. தனியார் பள்ளி தலைமையாசிரியர். இவரது மனைவி சீலாசாலமோன் 54. அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியை. இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.
ஆக.7 ம் தேதி காலை 11:00 மணிக்கு ஜோசப் மீண்டும் வீட்டிற்கு வந்து ஹெல்மெட் எடுத்து விட்டு சென்றார். அன்று மாலையில் இருவரும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த 84 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். டி.எஸ்.பி., நல்லு தலைமையில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-