/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனக்குழுவிற்கு ரூ.4.10 லட்சம் நிதி
/
வனக்குழுவிற்கு ரூ.4.10 லட்சம் நிதி
ADDED : பிப் 20, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், தமிழ்நாடு காடுகள் வளர்ப்பு திட்டத்தில் 7 கிராமங்களை தத்தெடுக்கப்பட்டு உள்ளன.
முதற்கட்டமாக போடி அருகே உள்ள சன்னாசிபுரம் கிராம வனக்குழுவை சேர்ந்த 41 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.4.10 லட்சம் நிதியுதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. நிதியுதவி வழங்கும் விழா சன்னாசிபுரம் கிராமத்தில் நடந்தது. தேனி ரேஞ்சர் சிவராம் தலைமை வகித்தார். வனவர் ராஜசேகரன், வனக்குழு கிராமத்தின் தலைவர் செல்வம், உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டன.