/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
‛'கோல்டன் ஹவர்ஸில்' உதவினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை விழிப்புணர்வு

ADDED : அக் 31, 2024 03:02 AM
தேனி: விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க உதவும் நபர்களுக்கு விபத்து தடுப்பு பாதுகாப்பு குழு பரிந்துரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குகிறது. இதில் உதவுபவர்களை ஊக்கப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. போலீஸ் கெடுபிடி, சட்டரீதியில் நீண்ட கால விசாரணை உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதில் இருந்து சிலர் பின்வாங்குவது தெரிய வந்துள்ளது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த விபத்துகளில் 15 லட்சம் பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்திய சட்ட ஆணைய தரவுகளின்படி இறந்த 15 லட்சம் பேரில், 50 சதவீதம் பேர் விபத்து நடந்த உயிர்காக்கும் உன்னத நேரத்தில் (கோல்டன் ஹவர்ஸ்) உதவிக்கு ஆட்கள் இன்றி,அதாவது விபத்தை எட்ட நின்று பார்ப்பவர் உதவாமல் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் (சமாரியன்) விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் உயிர்காக்கும் உன்னத நேரத்தில் உதவி செய்து காப்பாற்றுபவர்களுக்கு மாவட்ட விபத்து பாதுகாப்பு குழுபரிந்துரையின் படி, ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும் இதுகுறித்து மாவட்டந்தோறும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.