UPDATED : அக் 26, 2026 04:01 PM
ADDED : அக் 26, 2026 03:57 PM

சின்னமனூர்: சின்னமனூர், கம்பத்தில் நேற்று (அக்.,25) ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. சின்னமனூர் கண்ணாடி கடை சந்திப்பில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட துணை தலைவர் திருமூர்த்தி, ஆன்மிக பேச்சாளர் சீனிவாசன், லோகன்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர். பொதுக் கூட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆனந்த கார்த்திக் ராஜ் பேசினார்.
கம்பம் : கம்பத்தில் வ.உ.சி., திடலில் ஊர்வலத்தை நிர்வாகி முருகன் துவங்கி வைத்தார். கம்பம்-குமுளி நெடுஞ்சாலை, பார்க் திடல், நாட்டுக்கல், வேலப்பர் கோயில் தெரு வழியாக மீண்டும் வ.உ.சி. திடலை ஊர்வலம் நிறைவடைந்தது. தொடர்ந்து கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். நிர்வாகி கணேஷ் குமார் முன்னிலை வகித்தார். ஏரளமானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் அமைப்பின் வெள்ளை சட்டை, காக்கி நிற கால்சட்டை அணிந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
