UPDATED : அக் 26, 2026 03:57 PM
ADDED : அக் 26, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பத்திரம் எழுதுவோர் சங்கம், பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், பொருளாளர் சுப்புராம் முன்னிலை வகித்தனர்.
காகிதம் இல்லா, நேரில் வர தேவையற்ற பதிவு நடைமுறைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், 'ஸ்டார் 3.0' இ–டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழிகாட்டி மதிப்பு உயர்வை கைவிட கோரியும் கோஷமிட்டனர். முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரப்பதிவு எழுத்தர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
