சோத்துப்பாறை அணை நிரம்பி வராக நதியில் வெள்ளப்பெருக்கு
சோத்துப்பாறை அணை நிரம்பி வராக நதியில் வெள்ளப்பெருக்கு
UPDATED : அக் 26, 2026 05:05 PM
ADDED : அக் 26, 2026 05:02 PM

பெரியகுளம்: பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் யாரும் இறங்க கூடாது என நீர்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் வராகநதியின் குறுக்கே கட்டப்பட்ட சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழுவதும் நிரம்பி (மொத்த உயரம் 126.28 அடி) உள்ளது.
அணையில் இருந்து அக்.22 முதல் தண்ணீர் மறுகால் செல்வதால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர் வளத்துறை எச்சரிக்கை:
வராகநதியில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் வராகநதி பாயும் பெரியகுளம், பங்களாபட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோர பகுதியில் வசிப்போர் துணி துவைக்க, குளிக்க, கால்நடைகளை குளிக்க வைக்க ஆற்றில் இறங்க என நீர் வளத்துறையினர் எச்சரித்துள்ளனர். கனமழை காரணமாக மாவட்டத்தில் நேற்று பெரியகுளம் தாலுகாவில்உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது.
