/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த நிதி கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் முடிவு

ADDED : ஆக 18, 2025 06:15 AM
தேனி : 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த நிதி வழங்க வேண்டும், நெருக்கடியை கைவிட கோரி மாநிலம் முழுவதும் வட்டார அளவில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இச்சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் தாமோதரன் கூறியதாவது: மாவட்டங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்த செலவினங்களுக்கு நிதி விடுவிக்க வில்லை. இதனால் பல இடங்களில் முகாம் நடத்துவதில் சிரமம் நிலவுகிறது.
மேலும் மற்ற பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்துகின்றனர். அதே நேரம் இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு குறிப்பிட்ட நாள் அவகாசம் வழங்கி உள்ளனர். ஆனால் அந்த மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண கூறி அதிகாரிகள் நெருக்கடி அளிக்கின்றனர்.
முகாம் நடத்த நிதி வழங்க கோரியும், நெருக்கடி வழங்குவதை கைவிட கோரியும் கருப்பு பட்டை அணிந்து நாளை (ஆக.19ல்) தமிழகத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது., என்றனர்.