/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போராட்டத்திற்கு தயாராகும் ஊரக வளர்ச்சித்துறையினர்
/
போராட்டத்திற்கு தயாராகும் ஊரக வளர்ச்சித்துறையினர்
ADDED : பிப் 05, 2024 12:09 AM
தேனி : அலுவலகங்களில் இரவு 10:00 மணி வரை ஆய்வுகள், பணியிடத்தில் அரசியல் குறுக்கீடு உள்ளிட்டவற்றை கண்டித்து மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் தாமோதரன் கூறுகையில், விடுமுறை நாட்களில் கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என இரவு 10:00 மணி வரை ஆய்வுகள் நடக்கிறது. இதனால் ஊழியர்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை தொடர்கிறது. மேலும் பல ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அரசியல் தலையீட்டால் அலுவலர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது.
அதே போல் ஒரே ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் உதவி பொறியாளர்களையும் பணியிட மாற்றம் செய்ய கோரி வருகிறோம்.
இவற்றை கோரிக்கைகளாக அதிகாரிகளிடமும் தெரிவித்து உள்ளோம். உரிய நடவடிக்கை இல்லை என்றால் பிப்.,10ல் நடக்க உள்ள மாவட்ட செயற்குழுவில் ஆலோசித்து மாவட்ட அளவிலான போராட்டங்கள் நடத்த உள்ளோம்., என்றனர்.

