/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூதாட்டியை காப்பாற்றிய போலீசாருக்கு எஸ்.பி.,பாராட்டு
/
மூதாட்டியை காப்பாற்றிய போலீசாருக்கு எஸ்.பி.,பாராட்டு
மூதாட்டியை காப்பாற்றிய போலீசாருக்கு எஸ்.பி.,பாராட்டு
மூதாட்டியை காப்பாற்றிய போலீசாருக்கு எஸ்.பி.,பாராட்டு
ADDED : ஆக 24, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: போடி எஸ்.எஸ்.,புரம் மூதாட்டி இந்திராணி 75, மகள் கவுசல்யாவுடன் வசித்து வந்தார். உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டார்.
விரக்தியடைந்த மூதாட்டி தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று காலை வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் உள்ள கீழ் தடுப்பணைக்கு வந்தார். அங்கு குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவ்வழியாக சென்ற பட்டாலியன் போலீசார் ஹட்டிராஜ், பிரபாகரன் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
மூதாட்டியை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மூதாட்டி உயிரை காப்பாற்றிய போலீசார் இருவரையும் பாராட்டி எஸ்.பி., சினேஹாபிரியா சான்றிதழ் வழங்கினார்.