
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் ராஜமலை பெட்டி முடி டிவிஷனில் நான்கு வயது பெண் காட்டு மாடு காலில் கம்பி இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அதனை பார்த்த தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் காலில் கம்பிஇறுகிய நிலையில் காணப்பட்டதால் வனவிலங்குகளை வேட்டையாட வைத்த கண்ணியில் கால் சிக்கி காட்டு மாடு இறந்ததாக சந்தேகம் எழுந்தது. அது குறித்துவனத்துறையினர் விசாரிக்கின்றனர்.