/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 2026ல் காவி கொடி பறக்கும்: பா.ஜ. பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் பேச்சு

ADDED : ஏப் 19, 2025 06:15 AM
சின்னமனூர்; சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 2026ல் காவி கொடி பறக்கும் என பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் பேசினார்.
சின்னமனூரில் மாற்று கட்சிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ. வில் இணையும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் பேசியதாவது : முதல் தலைமுறை அரசியல்வாதிகள் நாங்கள். தி.மு.க. குடும்ப வாரிசு அரசியல் செய்கிறது.
தி.மு.க. தேசியத்திற்கு எதிரான கட்சி. தேச ஒற்றுமைக்கு எதிரான, பிரிவினைவாதம் கொண்ட தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
உங்கள் ஒவ்வொருவரின் கனவும் 2026ல் அ.தி.மு.க., பா.ஜ. கூட்டணி வெற்றி பெற அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.
காங்கிரஸ் செத்து போன கட்சி, போஸ்ட்மார்டம் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
தி.மு.க. தயவில் சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சிக்கு கிடைக்கிறது.
இந்தியா முழுவதும் பா.ஜ. ஆட்சி தான். 2026ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் அதற்காக பாடுபட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.