/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தயக்கம்! பாலாலய பூஜைக்கு பின் புனரமைப்பு பணி முடங்கிய நிலை

ADDED : நவ 13, 2024 11:52 PM
ஆண்டிபட்டி; சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
சக்கம்பட்டி சாலியர் சமூகத்தினர் நிர்வாகத்தின் கீழ் இருந்த இக்கோயில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக தனி நபர்கள் சிலர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இக்கோயில் நிர்வாகத்தை ஹிந்து அறநிலைத்துறையிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு முதல் இக்கோயில் நிர்வாகத்தை ஹிந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிச. 10ல் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது. பாலாலய பூஜைகளுக்கு பின் கோயிலில் எந்தவிதமான புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்கள் விநாயகர், பாலமுருகன், சிவன், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், நாகம்மாள், ஆஞ்சநேயர், கருப்பசுவாமி, நவக்கிரக சுவாமிகளை துணியால் சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ள கருவறைகளையும் பூட்டி வைத்துள்ளனர். முத்துமாரியம்மன் கோயில் கருவறையில் மட்டும் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களை, பக்தர்கள் வணங்கி பூஜைகள், நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் ஓராண்டாக தவிக்கின்றனர்.
கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த பல கோயில்களிலும் தமிழக அரசு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டு கும்பாபிேஷகம் நடத்தி வருகிறது. பாலாலய பூஜைகள் முடிந்து ஓராண்டாக போகும் நிலையில் சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை துவக்க ஹிந்து அறநிலையத்துறை தயக்கம் காட்டுவதற்கான காரணம் தெரியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.