/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் உழவர் சந்தையில் 40 டன் காய்கறி விற்பனை
/
கம்பம் உழவர் சந்தையில் 40 டன் காய்கறி விற்பனை
ADDED : அக் 31, 2024 03:11 AM
கம்பம்: கம்பம் உழவர் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரேநாளில் 40 டன் காய்கறி விற்பனையானது.
மாவட்டத்தில் கம்பம்,- தேனி உழவர் சந்தைகள் மட்டுமே தொடர்ந்து நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது.
அதிக காய்கறி விற்பனை, பொதுமக்கள் அதிகம் வருகை உள்ளது. கம்பம் உழவர் சந்தையில் அதிகாலையிலேயே கேரள வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து சென்று விடுவார்கள். பின்னர் பொதுமக்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை வந்து வாங்கி செல்வார்கள்.
தினமும் சராசரியாக 30 டன் வரை விற்பனை நடைபெறும்.
தீபாவளியை முன்னிட்டு நேற்று காலை காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்தது . காய்கறிகள் விலையும் சுமாராக இருந்தது. இதனால் ஒரே நாளில் 40 டன் காய்கறி விற்பனையானது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், இயல்பாக நடக்கும் வியாபாரத்தை விட கூடுதலாக நடந்தது.
40 டன் வரை விற்பனையானது. பொதுமக்கள் அதிகமாக வந்து கொள்முதல் செய்தனர் என்றனர். இஞ்சி, புதினா, கொத்துமல்லி தழை, கத்தரி, முருங்கை, பச்சை மிளகாய் போன்றவை அதிகம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.