/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாற்று பண்ணையில் நெட்டை, ஒட்டு ரக தென்னங்கன்றுகள் விற்பனை
/
நாற்று பண்ணையில் நெட்டை, ஒட்டு ரக தென்னங்கன்றுகள் விற்பனை
நாற்று பண்ணையில் நெட்டை, ஒட்டு ரக தென்னங்கன்றுகள் விற்பனை
நாற்று பண்ணையில் நெட்டை, ஒட்டு ரக தென்னங்கன்றுகள் விற்பனை
ADDED : செப் 27, 2024 07:36 AM
தேனி: தோட்டகலைத்துறை தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை, ஒட்டுரக தென்னங்கன்றுகள் வாங்கி பயன்பெறலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தென்னை நாற்று பண்ணை 16.8 ஏக்கரில் க.விலக்கு- வைகை அணை ரோட்டில் அமைந்துள்ளது.
அங்கு நாற்றங்கால், காற்றுபதனக்கூடம், மணல் பதன கூடம் அமைக்கப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, சவுகாட் பச்சை குட்டை, சவுகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை ரக தென்னை நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு அரசு திட்டங்களில் மானியத்திலும், நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
போடி அரசு தென்னை ஒட்டு மையத்தில் இருந்து குட்டை நெற்றுகள், விவசாயிகளிடமிருந்து நெட்டை நெற்றுகள் கொள்முதல் செய்து நெட்டை, குட்டை வீரிய ரக ஒட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
நெட்டை தென்னங்கன்றுகள் ரூ. 65க்கும், நெட்டை, குட்டை வீரிய ஒட்டுரக கன்றுகள் ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு 90250 45233 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.