/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனுமதியின்றி சில்லரை மதுபாட்டில்கள் விற்பனை தாராளம்! கள்ளச்சாராய ஊறலை தடுக்க தேடுதல் வேட்டை
/
அனுமதியின்றி சில்லரை மதுபாட்டில்கள் விற்பனை தாராளம்! கள்ளச்சாராய ஊறலை தடுக்க தேடுதல் வேட்டை
அனுமதியின்றி சில்லரை மதுபாட்டில்கள் விற்பனை தாராளம்! கள்ளச்சாராய ஊறலை தடுக்க தேடுதல் வேட்டை
அனுமதியின்றி சில்லரை மதுபாட்டில்கள் விற்பனை தாராளம்! கள்ளச்சாராய ஊறலை தடுக்க தேடுதல் வேட்டை
ADDED : ஜூலை 02, 2024 06:36 AM

தேனி : மாவட்டத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி டாஸ்மாக் மூடிய நேரங்களில் -சில்லரை விற்பனையில் மாமூல் வியாபாரிகள் தாராளமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கள்ளச்சாராய ஊறலை தடுக்க போலீசார் தேடுதல் வேட்டை பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர்
மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, புகையிலை, அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனையை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் குற்றவாளிகளை கைது செய்ய தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் தனிப்படை அமைத்து கடந்த சில வாரங்களில் 180க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாவட்டத்தில் மெத்தனால் பயன்பாடு, கள்ளச்சாராய ஊறல் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் சில மாமூல் வியாபாாரிகள் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகரித்து விற்கின்றனர். சிலர் டூவீலர்களில் மதுபாட்டில் மறைத்து கொண்டு சென்று காலை 6:00 முதல் 12:00 மணி வரையும், இரவு 10:00 முதல் நள்ளிரவு வரை விற்பனை செய்கின்றனர். இதனை உள்ளூர் போலீசார் கண்டும் காணாது போல் நடந்து கொள்வதால் மதுபாட்டில் விற்பனை தாராளமாக நடக்கிறது.
தீவிர கண்காணிப்பு:
கடந்த மே 5ல் கூடலுார் கருநாக்கமுத்தன்பட்டியில் சாராய ஊறல் வைத்திருந்த தோட்டக் காவலாளி சரவணன் 45, அவரது தம்பி குமரேசன் 40, ராஜேந்திரன் 55, ஆகியோர் 100 லிட்டர் பேரலில் கள்ளச்சாராயம் காய்ச்ச தயார் செய்திருந்தது கண்டறிந்து மூவரையும் கைது செய்தனர். மூலப்பொருட்களை அழித்தனர். இந்நிலையில் மலையடிவாரப் பகுதிகளிலும், கேரள எல்லை பகுதிகளிலும் சாராய ஊறல்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க தனிப்படைகள் தீவிர ரோந்து பணியில் உள்ளன. மாவட்டத்தில் அனுமதியின்றி சில்லரை மதுபாட்டில் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.