/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆயுத பூஜையை முன்னிட்டு விளாம்பழம் விற்பனை விறுவிறுப்பு
/
ஆயுத பூஜையை முன்னிட்டு விளாம்பழம் விற்பனை விறுவிறுப்பு
ஆயுத பூஜையை முன்னிட்டு விளாம்பழம் விற்பனை விறுவிறுப்பு
ஆயுத பூஜையை முன்னிட்டு விளாம்பழம் விற்பனை விறுவிறுப்பு
ADDED : அக் 01, 2025 10:23 AM

பெரியகுளம் : ஆயுதபூஜையை முன்னிட்டு விளாம்பழம் மூடை, மூடையாக மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்புவதால் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது.
பெரியகுளம் அருகே முருகமலை, வாலாட்டி, செலும்பு சோத்துப்பாறை, கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விளாம்மரங்கள் உள்ளது. மா, தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக இந்த மரங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை விளையும். ஆகஸ்டில் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு விளாம்பழம் படைக்கப்படுவதால் 80 சதவீதம் விளைச்சலில் முதல் அறுவடையும், செப்டம்பரில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, பூஜைகளில் விளாம்பழம் பயன்பாடு அதிகம் என்பதால் முழுமையாக அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்திற்கு 150 முதல் 200 கிலோ விளாம்பழம் கிடைக்கும். சிவனுக்கு உகந்தது விளாம்பழம். இப் பழத்தின் மேற்பகுதி கடினமாகவும், அதிலுள்ள சதைப்பகுதி புளிப்பு தன்மையில் , இனிப்பு கலவையாக இருக்கும். இதில் சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் 'தித்திப்பாக' இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உட்பட மருத்துவ குணங்கள் நிறைந்தது.
விளாம்பழம் சாகுபடி விவசாயி கார்மேகம் கூறுகையில், 'பெரியகுளம் பகுதியிலிருந்து ஆயுதபூஜை, நவராத்திரி விழாக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் விளாம்பழம் அனுப்பப்படுகிறது.
40 கிலோ எடையுள்ள மூடை ரூ.1500 முதல் ரூ.1600 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.100 வரை விற்கின்றனர். பெரியகுளம் பகுதியில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான மூடைகள் மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது,' என்றார்.-