/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணம் பறிப்பை தடுக்கும் ‛'சஞ்சார் சாதி' செயலி
/
பணம் பறிப்பை தடுக்கும் ‛'சஞ்சார் சாதி' செயலி
ADDED : செப் 03, 2025 12:59 AM

தேனி:அலைபேசி திருட்டு, வெளிநாடுகளில் இருந்து பணம் பறிக்கும் வகையில் வரும் அழைப்புகளை தவிர்க்க மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ( Sanchar Saathi) 'சஞ்சார் சாதி' செயலி பயன்படுத்துமாறு தேசிய தகவலியல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: மத்திய அரசின் தகவல் தொடர்பு துறை இச்செயலியை அறிமுகம் செய்துள்ளது. இச் செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். அந்த செயலி மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகள், பணம் பறிக்கும் வகையில் போலியாக இகேஒய்சி, சான்றிதழ் சரிபார்ப்பு, காஸ் இணைப்பு என பேசும் அழைப்புகளை குறித்து புகார் செய்யலாம். அலைபேசி தொலைந்தாலும் செயலியில் புகார் செய்து அதனை யாரும் பயன்படுத்தாதவாறு தடை செய்யலாம். தொலைந்த அலைபேசி மீண்டும் கிடைத்தால் திரும்ப பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். பழைய அலைபேசிகள் வாங்கும் போது அந்த அலைபேசி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் பயன்படுத்தும் அலைபேசி எண்ணை பயன்படுத்தி இதுவரை வாங்கப்பட்டுள்ள சிம்கார்டுகள் எண்ணிக்கை அறிந்து கொள்ளலாம் என்றனர்.