ADDED : அக் 31, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு:  கண்டமனூர் போலீசார் குப்பிநாயக்கன்பட்டி ஆற்றப்படுகையில் ரோந்து சென்றனர்.
அப்போது இரு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.  மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் மணல் திருட்டில் ஈடுபட்ட லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அடையாளம் தெரிந்த மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

