/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : அக் 31, 2025 01:52 AM

தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பரமேஸ்வரனுக்கு 22, இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெரியகுளம் தாலுகாவில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 10 வயது சிறுமி தங்கி அப்பகுதி பள்ளி ஒன்றில் படித்தார்.
கோடை விடுமுறைக்காக 2024 ஏப்.,25ல் தாத்தா, சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.  விடுமுறை முடிந்து காப்பகத்தில் தாத்தா விட்டுச் சென்றார். பள்ளிக்கு சென்ற சிறுமி அமைதியாக இருந்தார். இதனை கவனித்த  ஆசிரியை சிறுமியிடம் விசாரித்தார். சிறுமி, 2024 மே 23ல் தாத்தா, பாட்டி வேலைக்கு சென்ற போது அங்கு வந்த உறவினர் பரமேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்தார்,' என்றார்.
வார்டன் புகாரின்படி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து பரமேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
பரமேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
சிறுமிக்கு இழப்பீடாக ரூ.8 லட்சம் தமிழக அரசு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

