/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சனீஸ்வர பகவான் கோயில் : பரம்பரை அறங்காவலர், கோயில் பணியாளர் மோதல்
/
சனீஸ்வர பகவான் கோயில் : பரம்பரை அறங்காவலர், கோயில் பணியாளர் மோதல்
சனீஸ்வர பகவான் கோயில் : பரம்பரை அறங்காவலர், கோயில் பணியாளர் மோதல்
சனீஸ்வர பகவான் கோயில் : பரம்பரை அறங்காவலர், கோயில் பணியாளர் மோதல்
ADDED : பிப் 22, 2024 06:10 AM
சின்னமனூர் : குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று பரம்பரை அறங்காவலருக்கும், கோயில் ஊழியருக்கும் இடையே எழுந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் சின்னமனுார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இக்கோயிலில் அமைந்துள்ள சுயம்பு சனீஸ்வர பகவானுக்கு தனி கோயில் இங்கு மட்டுமே உள்ளது. இந்த கோயில் நிர்வாகத்தை பல ஆண்டுகளுக்கு முன் பரம்பரை அறங்காவலர்களிடம் இருந்து ஹிந்து சமய அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது. பரம்பரை அறங்காவலர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்து கடந்த மாதம் தீர்ப்பு ஒன்றை பெற்றனர். கோயில் நிர்வாகத்தை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
அதன்படி பரம்பரை அறங்காவலர்கள் கடந்த மாதம் கோயில் நிர்வாகிகளாக பதவி ஏற்க வந்த போது, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அப்பீல் செய்துள்ளோம் என்று கூறி பொறுப்புகளை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை அறங்காவலர் திருமலை முத்து, அவரது மகன் தீபன் நேற்று கோயில் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த ஊழியர் மாரிச்சாமிக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் பரஸ்பரம் தங்களை தாக்கியதாக சின்னமனுார் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கோயில் பணியாளர் மாரிச்சாமி சின்னமனூர் அரசு மருத்துவமனையிலும், அறங்காவலர் திருமலைமுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் புகார் ஏற்பு மனு ரசீது மட்டும் வழங்கியுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்படவில்லை.