/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோழி பிடிக்க சென்ற தூய்மை பணியாளர் கிணற்றில் விழுந்து பலி
/
கோழி பிடிக்க சென்ற தூய்மை பணியாளர் கிணற்றில் விழுந்து பலி
கோழி பிடிக்க சென்ற தூய்மை பணியாளர் கிணற்றில் விழுந்து பலி
கோழி பிடிக்க சென்ற தூய்மை பணியாளர் கிணற்றில் விழுந்து பலி
ADDED : மார் 03, 2024 06:18 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் 52.
இவரது மனைவி சுப்புலட்சுமி 45. இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். முருகேசன் பொம்மிநாயக்கன் பட்டி
ஊராட்சி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த பாட்ஷா நேற்று முன்தினம் காதர் மொய்தீன் கிணற்றில் தனது 3 கோழிகள் விழுந்துவிட்டது. அதை எடுத்து கொடுக்குமாறு முருகேசனை அழைத்தார். முருகேசன் மறுத்தார். மீண்டும் அழைத்ததால் முருகேசன் சென்றார்.
பாட்ஷா இரு கோழிகளுடன் திரும்பிய நிலையில், முருகேசன் வரவில்லை.
பெரியகுளம் தீயணைப்பு மீட்பு வீரர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு 50 அடி ஆழம் 25 அடி தண்ணீர் கிணற்றில் தவறி விழுந்த முருகேசன் உடலை மீட்டனர். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.