/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போனஸ் வழங்காததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
/
போனஸ் வழங்காததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
போனஸ் வழங்காததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
போனஸ் வழங்காததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : நவ 02, 2024 08:34 AM

பெரியகுளம்,: பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் நகராட்சியில் 50க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை. இவர்களுக்கு தினமும் தலா ரூ.483 வீதம் அக்., மாதம் சம்பளம் தீபாவளிக்கு முன்னதாகவே தருவதாக தெரிவித்திருந்தனர் அதுவும் வழங்கப்படவில்லை.
ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, காப்பீடு கணக்குகள் பராமரிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி நேற்று நகராட்சி அலுவலகம் வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வார்டுகளில் குப்பை சேகரிப்பு பணி நடைபெறவில்லை. பொது சுகாதாரம் பாதித்தது. நகராட்சி தலைவர் சுமிதா, தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.