/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்

ADDED : டிச 26, 2024 05:28 AM
பெரியகுளம்: ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிவதால் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவல நிலை தொடர்கிறது.
பெரியகுளம் ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 7 முதல் 10 தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு உபகரணங்கள், பணி செய்ய உதவி உபகரணங்களான மண்வெட்டி, இரும்பு தட்டு,மண் வாரி, கடப்பாரை, வாச்சத்து வழங்கப்பட்டன. ஆனால் தற்போது அவை சேதமடைந்து விட்டது.
சில ஊராட்சிகளில் இப் பொருட்கள் இல்லை. இதனால் பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு இன்றி வெறும் கைகளில் குப்பை அள்ளும் அவல நிலை தொடர்கிறது.
சில சமூக விரோதிகள் மது குடித்து விட்டு பாட்டில்கள் உடைத்து வீசுவதால் இவற்றை வெறும் கைகளினால் அகற்றும் போது பணியாளர்கள் கைகளில் ரத்த காயங்கள் ஏற்படுகிறது.
சில இடங்களில் கழிவுநீர் கால்வாய், சாக்கடைகளில் பணிபுரியும் போது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிகின்றனர்.
இதனால் நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றிய நிர்வாகம் ஊராட்சிகளில்
பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.