ADDED : செப் 19, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் துாய்மை இந்தியாவிற்கு சேவை என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். விளையாட்டு அரங்கில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை தன்னார்வலர்கள் சேகரித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், கம்மவார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் செல்வக்குமார், நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.