/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் அருகே நர்சரியில் வீணாகும் மரக்கன்றுகள்
/
சின்னமனுார் அருகே நர்சரியில் வீணாகும் மரக்கன்றுகள்
சின்னமனுார் அருகே நர்சரியில் வீணாகும் மரக்கன்றுகள்
சின்னமனுார் அருகே நர்சரியில் வீணாகும் மரக்கன்றுகள்
ADDED : மார் 27, 2025 05:14 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஒவுலாபுரத்தில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யாமல் நர்சரியில் வீணாகி வருகிறது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்க்க நர்சரி அமைத்தனர். நர்சரியில் மரக்கன்றுகள் வளர்த்து தேவையான இடங்களில் நடவு செய்து, பசுமை போர்வை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன ஒவுலாபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கைவிடப்பட்டது.
இங்குள்ள பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட நர்சரியில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை வளர்க்கும் பாலிதீன் பைகளில் வீணாகி கிடக்கிறது. நர்சரி பராமரிப்பு இன்றி மரக் கன்றுகள் வளர்ப்பது கைவிடப்பட்டுள்ளது. ஆனால் மரக்கன்றுகள் வளர்ப்பது போன்றும், நடவு செய்வது போன்றும் கணக்கு மட்டும் காட்டப்படுகிறது.