/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சவலைப்பிளையான போடி தொகுதி; தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., பேச்சு
/
சவலைப்பிளையான போடி தொகுதி; தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., பேச்சு
சவலைப்பிளையான போடி தொகுதி; தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., பேச்சு
சவலைப்பிளையான போடி தொகுதி; தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., பேச்சு
ADDED : நவ 13, 2024 11:51 PM
போடி; தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் போடி சட்டமன்ற தொகுதி முகவர்கள் ஆய்வு கூட்டம் நகர செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது.
இதில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., பேசுகையில் : தமிழக முதல்வரின் திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் வரும் சட்டசபை தேர்தலில் எளிதில் தி.மு.க., வெற்றி பெறும். கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். வெற்றி பெற்றிருந்தால் அமைச்சராகி தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வந்திருப்பேன். வெற்றி பெற்றவர் திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. முதல்வாக இருந்த போதும் செய்யவில்லை. போடி தொகுதி தி.மு.க., வெற்றி பெறாமல் சவல பிள்ளையாக உள்ளது.
நான் தோற்றாலும் கொட்டகுடி ஆற்று பகுதியில் தடுப்பணை கட்ட ரூ. 500 கோடியில் திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளேன். முதல் கட்டமாக ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இத்திட்டம் மூலம் போடி தொகுதி வளர்ச்சி அடையும்.
தற்போது எம்.பி., ஆனதால் தொகுதிக்கு பாடுபடுவேன். வரும் தேர்தலில் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்து போடி தொகுதியை தி.மு.க., கோட்டையாக மாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு மாநில இலக்கிய அணி செயலாளர் நேரு பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன், அய்யப்பன், நகராட்சி தலைவர் ராஜ ராஜேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

