ADDED : ஜன 08, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழகத்தில் நேற்று 48 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தேனி எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த பிரவீன் உமேஷ் டோங்கரே மதுரை எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் தேனி எஸ்.பி.,யாக 2021 ஜூன் முதல் பொறுப்பு வகித்து வந்தார்.
தேனி எஸ்.பி.,யாக மதுரை எஸ்.பி., சிவபிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.