/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவச வேட்டி, சேலைகள் 72,736 பேருக்கு வழங்க திட்டம்
/
இலவச வேட்டி, சேலைகள் 72,736 பேருக்கு வழங்க திட்டம்
இலவச வேட்டி, சேலைகள் 72,736 பேருக்கு வழங்க திட்டம்
இலவச வேட்டி, சேலைகள் 72,736 பேருக்கு வழங்க திட்டம்
ADDED : நவ 01, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஆண்கள் 54,588 பேர், பெண்கள் 18,148 பேர் என மொத்தம் 72,736 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஷஜீவனா அல்லிநகரம் ரேஷன் கடையில் துவக்கி வைத்தார்.
பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முத்தனம்பட்டியில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், கம்பம் கூட்டுறவு ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.