நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் ராயப்பன்பட்டி புனித அல்லோசியலஸ் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சேவியர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆன்டனிராஜ் முன்னிலை வகித்தார். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
என்.எஸ்.எஸ்., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் விழாவை ஒருங்கிணைத்தார்.