ADDED : ஏப் 10, 2025 06:24 AM
கல்லுாரி ஆண்டு விழா
தேனி: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த ஆண்டுவிழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார். நகைச்சுவை நடிகர் சார்லி பேசினார். கல்லுாரி முதல்வர் சித்ரா தலைமையில் துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
பரிசு வழங்கும் விழா
தேனி: தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக்கில் மாணவர்களுக்கான கலைவிழா, விருது வழங்கும் விழா நடந்தது. பாலிடெக்னிக் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். மண்டல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, துணைத்தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.