நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : பாலக்கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கைத்தறி இணை இயக்குனர் (ஓய்வு) முனைவர் நாகராஜ் தலைமை வகித்தார். கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் 400க்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பள்ளியில் பிளஸ் 2 முடித்து ஜே.இ.இ.,தேர்வில் தேர்ச்சி பெற்று ஹைதராபாத் ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவி பவித்ரா ஆகியோர்களை தலைமை ஆசிரியர் பெத்தணசாமி ஊர் பொதுமக்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர். பாலக்கோம்பை ஊராட்சி முன்னாள் தலைவர் வேல்ஆண்டவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகேயன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்கொடி, ஊர் முக்கிய பிரமுகர்கள் மணிகண்டன், பழனிச்சாமி, நாட்ராயன், பாலகுருசாமி, அய்யாவு, குருசாமி பங்கேற்றனர்.

