
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி உப்புக்கோட்டை பச்சையப்பா உயர் நிலை, துவக்கப் பள்ளிகளின் ஆண்டு விழா பள்ளிச் செயலாளர் லட்சுமிவாசன் தலைமையில் நடந்தது. பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்ப ராஜா, தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, டாக்டர்கள் மூங்கில் ராஜா, நாகநந்தினி, போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் காளிமுத்து முன்னிலை வகித்தனர்.
துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை தங்கம்மாள் வரவேற்றார். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

