நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 72 ஆவது ஆண்டு விழா ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெகதா தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா வரவேற்றார். விழாவில் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.