நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழாவிற்கு அல்லிநகரம் நாயுடு சங்க தலைவர் பாலகுரு தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் நாராயணபாண்டியன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் பரந்தாமன் வரவேற்றார். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் வினோத்குமார், மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தனர். விழாவில் உள்ளூர் பிரமுகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.