UPDATED : நவ 23, 2026 07:40 PM
ADDED : நவ 23, 2026 07:40 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 25 ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் லதா தலைமை வகித்தார். செயலர் விஜயராணி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர்கள் முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன் வரவேற்றனர். கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் பரமேஸ்வரி பரிசுகள் வழங்கி, பாராட்டினார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர்கள் பங்கேற்றனர்.
