UPDATED : நவ 23, 2026 07:40 PM
ADDED : நவ 23, 2026 07:40 PM

அ நிறம் | அளவு
கூடலுார்: மாநில அளவிலான ஜூடோ போட்டி திருப்பூரில் நவ.20 முதல் 22 வரை நடந்தது.
இதில் தேனி மாவட்டத்தில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். கூடலுார் சாய் அகாடமியில் பயிற்சி பெற்ற 6ம் வகுப்பு மாணவர்கள் நவநீத பாண்டியன் தங்கப்பதக்கமும், விஷ்வா வெள்ளிப் பதக்கமும், நிலாவினி வெண்கல பதக்கமும் பெற்றனர். உத்தமபாளையம் சாம்பியன்ஸ் ஜூடோ கிளப்பில் பயிற்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் அர்ச்சனா வெள்ளிப் பதக்கமும், அப்துல் அஜீஸ், பிரியா, முகிலன் ஆகியோர் வெண்களப் பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் ரவி, டெக்னிக்கல் சேர்மன் முரளி, செயலாளர் செல்லப்பாண்டியன், பயிற்சியாளர் சங்கீதா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
