ADDED : அக் 16, 2026 07:58 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பெய்த கன மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் 30 மீட்டர் தூரத்திற்கு இடிந்து விழுந்தது. இரவு என்பதால் அசம்பாவிதம் ஏதும் இல்லை.
பள்ளி வளாகம் பின்புறம் பல மாதங்களாக திறந்த வெளியாக கிடக்கிறது. இதனால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு காலங்களில், வெள்ளநீர் பள்ளி வளாகத்தில் புகுந்து விடுகிறது. திறந்த வெளியாக இருப்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் தாராளமாக உள்ளது. தற்போது பள்ளி வலது புறம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் முழுவதையும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
