UPDATED : அக் 16, 2026 07:36 PM
ADDED : அக் 16, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி முத்துத்தேவன்பட்டியில் குடியிருக்கும் சிலருக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் தேனி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். பெரியகுளம் ரோட்டில் இருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், கண்ணன்,சத்யா, முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரத்தினத்திடம் மனு அளித்தனர்.
