ADDED : மார் 25, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த சிறப்பு நாள் விழா, பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி தமயந்தி, செயலாளர் மாத்யூ ஜோயல் முன்னிலை வகித்தனர். முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.
ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பாட புத்தக நிறுவன மேலாளர் ஷீபா, பாடத்திட்ட பயிற்சியாளர் சங்கரன், பிரதிநிதிகள் செந்தில், சரண்குமார் ஆகியோர் பேசினர்.
பள்ளி குழந்தைகள் தாங்கள் பயின்ற பாடல்கள், கதைகளை பெற்றோர்கள் முன்பு வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா செய்திருந்தனர்.