ADDED : ஜன 01, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் விகாசா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விகாசா கல்வி குழுமங்களின் சேர்மன் இந்திரா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் உதயக்குமார் முன்னிலை வகித்தார் .
நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சேது பாலாண்டி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்களை இன்ஸ்பெக்டர் வழங்கினார். மாலையில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்ட நீதிபதி ரவி அவர்கள் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.