/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் பள்ளி விளையாட்டு விழா
/
ஆண்டிபட்டியில் பள்ளி விளையாட்டு விழா
ADDED : ஜன 29, 2024 06:31 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் லிட்டில் பிளவர் பள்ளியின் விளையாட்டு விழா நடந்தது. துவக்கப் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜான்சன் ஒலிம்பிக் சுடர் ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், ஆலோசகர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் பாதிரியார் ஜஸ்டின் திரவியம் ஒலிம்பிக் கொடி ஏற்றி வைத்தார். பள்ளிச் செயலாளர் மாத்யூஜோயல் பள்ளிக்கொடி ஏற்றி வைத்தார். மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுகளின் இறுதி சுற்றுப் போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கான போட்டி, பெற்றோர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, ஆசிரியர்கள், கவிதா, பூமா, ராகிணி, பாண்டிச்செல்வி செய்திருந்தனர்.