ADDED : செப் 15, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
அல்லிநகரம் நாயுடு சங்கத்தின் தலைவர் பாலகுரு தலைமை வகித்தார். பள்ளியின் கல்வி சங்க செயலாளர் பாக்கியகுமாரி ஒலிம்பிக் கொடி ஏற்றினார். வழக்கறிஞர் முத்துராமலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பரந்தாமன் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பள்ளி விளையாட்டு அலுவலர் கார்த்திகேயன், துணை முதல்வர் வினோத்குமார் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.