/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில சிலம்ப போட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாநில சிலம்ப போட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : அக் 21, 2025 04:07 AM
தேனி: தேனி கண்டமனுார் சங்கர் சிலம்பக்கூடம் பயிற்சி மையத்தில் கண்டமனுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வீரபாண்டி சவுராஷ்டிரா கல்லுாரி மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
சிலம்பம் பயிற்சிக்கான தேசிய நடுவர் மணிகண்டன் (ஏட்டு), மாநில நடுவர் பிரேம்குமார் (சி.ஆர்.பி.எப்., ) ஆகியோரிடம் ஏழு மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சி பெற்றனர். கடந்த அக். 2 முதல் அக்.14 வரை சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்கலையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான பல்துறை 29 விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் சிலம்பப் போட்டியில் பங்கேற்ற மாணவர் பாண்டீஸ்வரன், மாணவி ஹரிணிஸ்ரீ 2 தங்கப்பதங்கள் (ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பதக்கம், சான்றிதழ்), கோடீஸ்வரன், ஸ்ரீசுதன், உதயகுமார், ராஜபாண்டி, நவீன்குமார் ஆகிய ஐவர் வெள்ளிப் பதக்கங்களும் (ரூ.75 ஆயிரம் பரிசுத் தொகை, பதக்கம், சான்றிதழ் பெற்று சாதனை படைத்தனர். அவர்களை கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சினேஹாப்ரியா பாராட்டினர்.