/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட அணைகள் நிரம்புவதால் விவசாயிகள்... மகிழ்ச்சி: சண்முகாநதி, சோத்துப்பாறை அணைகள் மறுகால் பாய்கிறது

ADDED : அக் 21, 2025 04:06 AM

பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதி, சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. கடந்த வாரம் அக்.12ல் 76.42 அடியாகவும், அக்.13ல் 76.75 அடியாகவும், அக்.14 ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 86.42 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. பின் அக்.17ல் 105 அடியை தொட்டது. அக்.18ல் 110.20 அடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் அக்.19ல் கொடைக்கானல் மலைப்பகுதி, நீர்பிடிப்பு பகுதியில் 75 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், நீர்மட்டம் 'கிடுகிடுவென' உயரத் துவங்கியது. ஒரே நாளில் 16 அடி உயர்ந்து, இரவு 10:00 மணிக்கு அணை நீர்மட்டம் முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. அணைக்கு வினாடிக்கு 539.57 கன அடி நீர் வரத்து உள்ளது. இந்த நீர் அப்படியே மறுகால் பாய்கிறது.
சண்முகாநதி அணையின் மொத்த உயரம் 55.55 அடி. தற்போதைய நீர் இருப்பு 55.50 அடி. நீர்வரத்து 69 கன அடி. சோத்துப்பாறை 126 அடி. நீர்வரத்து 539.57 கன அடி. அணை நிரம்பியதால் மறுகால் பாய்கிறது. மஞ்சளாறு அணை மொத்தம் 57 அடி. நீர் இருப்பு 40 அடி. நீர்வரத்து 147 கன அடி. வெளியேற்றம் இல்லை.
தென்கரை விவசாயிகள் சங்க தலைவர் வீரகேசவன் கூறுகையில்: இந்தாண்டு போதுமான மழை இல்லை. இதனால் சோத்துப்பாறை அணை எப்போது நிறையும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். தற்போது அணை நீர்மட்டம் நிறைந்து மறுகால் பாய்வதால் மகிழ்ச்சி அடைகிறோம்., என்றார்.