/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
/
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜூலை 31, 2025 03:13 AM

போடி : போடி அத்லெடிக் அகாடமி, ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு எஜுகேஷனல் பவுண்டேஷன் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமை வகித்தார். அத்லெடிக் அகாடமி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவா முன்னிலை வகித்தனர். போட்டியில் 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கான 100 மீ., ஓட்டத்தில் போடி ஜ.கா.நி., பள்ளி மாணவி சாருதேசனா, 400 மீ., ஓட்டத்தில் தேனி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவி யாகவி ஸ்ரீ, 600 மீ., ஓட்டத்தில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி மாணவி லட்சுமி ஸ்ரீ, ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
மாணவர்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெய்சஞ்சய், 400 மீ., ஓட்டத்தில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் கோபிகா கிருஷ்ணன், 1500 மீ., ஓட்டத்தில் போடி ஜ.கா.நி., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் லோகேந்திரன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில் போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சம்ருதி முதலிடம் பெற்றார். ஒவ்வொரு போட்டியிலும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டன.