/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
/
மாவட்ட விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஆக 22, 2025 02:42 AM
தேனி: மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
குறுவட்ட அளவிலான போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட அளவிலான போட்டிகள் ஆக.,19ல் துவங்கியது. நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல், தேவாரத்தில் பீச் வாலிபால் போட்டி நடந்தது. நீச்சல் போட்டியில் மாணவிகள் 19 வயது பிரிவில் ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50மீ., ப்ரீஸ்டெயில் போட்டியில் ஜனனி, 100 மீ., 200மீ.,ல் மாணவி சுபிக்ஷா வெற்றி பெற்றனர். 17 வயது பிரிவில் 200 மீ., பட்டர்பிளே போட்டியில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி மாவி நிஷிதாமித்ரா, 50 மீ., போட்டியில் ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளி மாணவி வாசுமதி, 400 மீ., ப்ரீ ஸ்டெயிலில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவி நிஷாமித்ரா, 50 மீ.,100மீ., பிரிவில் மார்க்கையன் கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகா முதலிடம் வென்றனர்.
14 வயது பிரிவில் 50 மீ.,ப்ரீஸ்டெயில் பிரிவில் தேனி மேரிமாதா பள்ளி மாணவி மிருதுளா, 200 மீ., பிரிவில் தேவதானப்பட்டி அரசுப்பள்ளி மாணவி சாதனா, 50மீ., பேக் ஸ்ட்ரோக், 50மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் தேனி மேரிமாதா மாணவி மிருதுளா முதலிடம் வென்றார்.
தடகளம், குழுப்போட்டிகள் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் முடிந்த பின் நடைபெறும் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.