/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறுவட்ட தடகள போட்டிகளில் குதுகலமாக பங்கேற்ற மாணவர்கள் பள்ளி மாணவிகள் சாதனை
/
குறுவட்ட தடகள போட்டிகளில் குதுகலமாக பங்கேற்ற மாணவர்கள் பள்ளி மாணவிகள் சாதனை
குறுவட்ட தடகள போட்டிகளில் குதுகலமாக பங்கேற்ற மாணவர்கள் பள்ளி மாணவிகள் சாதனை
குறுவட்ட தடகள போட்டிகளில் குதுகலமாக பங்கேற்ற மாணவர்கள் பள்ளி மாணவிகள் சாதனை
ADDED : ஆக 12, 2025 06:39 AM

தேனி : தேனியில் நடந்த குறுவட்ட தடகள போட்டிகளில் பள்ளி மாணவர்கள் குதுகலமாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தேனி குறுவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் மேரிமாதா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாணவர்களுக்கான போட்டிகளில் 14 வயது பிரிவில் 80மீ., தடைதாண்டும் போட்டியில் மேரிமாதா பள்ளி மாணவர் மதுரவேல், வேலம்மாள் மெட்ரிக்பள்ளி மாணவர் சித்தேஷ்வர் முதல் இரு இடங்களை வென்றனர்.
உயரம் தாண்டுதலில் வேலம்மாள் பள்ளி சித்தேஷ்வர் மேரிமாதா பள்ளி மதுரவேல், 600 மீ., ஓட்டத்தில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகாஷ், முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., பள்ளி மதுரூபன், வட்டு எறிதலில் மேரிமாதா பள்ளி மாணவர்கள் கவுசிக், ஜோஸ்வா பிரின்ஸ் ஆகியோர் முதல் இரு இடங்களை வென்றனர்.
17 வயது பிரிவில் 800 மீ., ஓட்டத்தில் வேலம்மாள் பள்ளி ஆல்வின்சேஷன், பாலம் மெட்ரிக் பள்ளி ஹரிராம், 110 மீ., தடைதாண்டுதலில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மதுமித்ரன், முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., யங்சங்கர், வேலம்மாள்பள்ளி நிகில்தர்ஷன், உயரம் தண்டுதல், மும்முறை தாண்டுதலில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கோபிகிருஷ்ணன், பரத்வாஜ் முதல் இரு இடங்களை வென்றனர்.
ஓட்டம், உயரம் தாண்டுதலில் சாதித்த மாணவிகள் மாணவிகள் பிரிவில் 14 வயதிற்கு உட்பட்ட 600 மீ., ஓட்டத்தில் பி.சி., கான்வென்ட் பள்ளி மாணவிகள் மனுஸ்ரீ, விலிஷா, 80 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் பி.சி., கான்வென்ட் பள்ளி மாணவிகள் கவுசிகா, அபிஸ்ரீ, உயரம் தாண்டுதலில் மேரிமாதா பள்ளி மாணவிகள் தனன்யாஸ்ரீ, பிராத்தனா, வட்டு எறிதலில் என்.எஸ்., பெண்கள் பள்ளி மாணவிகள் சஷ்டிகா, திவ்யஸ்ரீ முதல் இரு இடங்களை வென்றனர்.
17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 800 மீ., ஓட்டத்தில் வேலம்மாள் பள்ளி மாணவி கோபிகாஸ்ரீ, முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., பள்ளி மாணவி பிரிஜிதா, 100 மீ., தடைதாண்டுதல் ஓட்டத்தில் வேலம்மாள் பள்ளி மாணவி நேசிகாஸ்ரீ, என்.எஸ்., பெண்கள் பள்ளி வித்யா, உயரம் தாண்டுதலில் டி.எம்.எச்.என்.யூ., மாணவி கோகுலசாய்ஸ்ரீ, நாகலாபுரம் இஷானாஸ்ரீ, மும்முறை தாண்டுதலில் பி.சி., கான்வென்ட் பள்ளி மாணவி நவஸ்ரீ, வேலம்மாள் பள்ளி ஜீவா, வட்டு எறிதலில் மேரிமாதா பள்ளி கிரண்சேஷிமா, வேலம்மாள் பள்ளி ஜீவா முதல் இரு இடங்களை வென்றனர்.
முதல் இரு இடங்களை வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், பவுன்ராஜ், அருள்பாபு, பொன்னுசாமி, செல்வேந்திரன் ஒருங்கிணைத்தனர்.