/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மாநாடு நிறைவு
/
பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மாநாடு நிறைவு
ADDED : ஜன 08, 2024 05:08 AM
மூணாறு : மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்ற கேரள பள்ளி ஆசிரியர்கள் சங்க இடுக்கி மாவட்ட மாநாடு நிறைவு பெற்றது.
நேற்று முன்தினம் துவங்கிய மாநாட்டிற்கு சங்கத்தின் இடுக்கி மாவட்ட தலைவர் மனோஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் சுராஜ் தொடங்கி வைத்தார். மாநாட்டில் 240 பிரதிநிதிகளுடன் தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா, மாநாட்டின் வரவேற்பு குழு தலைவர் சசி உள்பட பலர் பங்கேற்றனர். அதன் பின் நடந்த பொதுக் கூட்டத்திற்கு உடும்பன்சோலை எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார்.
நேற்று மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மனோஜ், செயலாளர் அனில்குமார், பொருளாளர் தங்கராஜ் உள்பட 45 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நிறைவு பெற்றது.