/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டு வாடகைப்படி ஒதுக்கீடு குறைவால் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சிக்கல்
/
வீட்டு வாடகைப்படி ஒதுக்கீடு குறைவால் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சிக்கல்
வீட்டு வாடகைப்படி ஒதுக்கீடு குறைவால் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சிக்கல்
வீட்டு வாடகைப்படி ஒதுக்கீடு குறைவால் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சிக்கல்
ADDED : பிப் 01, 2025 05:39 AM
கம்பம்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ஜனவரிக்குரிய வீட்டு வாடகை படி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் சம்பளம் பெற முடியாத நிலை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 36 உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் மாவட்டம் முழுவதும் 700 முதல் 800 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 200 க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் மாத இறுதி நாளில் அல்லது அடுத்த மாதம் முதல் தேதியில் சம்பளம் கிடைத்து விடும். இதற்கான சம்பள பட்டியலை அந்தந்த பள்ளிகளில் உள்ள அலுவலர்கள் தங்களது அலுவலக கம்ப்யூட்டரில் உள்ள FHRMS மூலம் தயாரிப்பார்கள். சம்பளத்தில் அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை படி, மருத்துவ படி என உள் ஒதுக்கீடுகள் இருக்கும். ஜனவரி சம்பள பட்டியலை சாப்ட்வேரில் தயாரிக்க முடியவில்லை. பள்ளி அலுவலர்கள் தேனி கருவூலத்தை தொடர்பு கொண்ட போது, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தில் HRA எனும் வீட்டு வாடகை படி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால், சாப்ட்வேர் செயல்படாது.
இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில நாட்களில் HRA ஒதுக்கீடு சரியான அளவு அனுமதிக்கப்படும். அதன் பின் சம்பள பட்டியல் தயாரிப்பு மேற்கொள்ளுங்கள், என்று கூறினர். வீட்டு வாடகை படி சரியான ஒதுக்கீடு செய்ய பிப். 10 ம் தேதி வரை ஆகலாம் என்பதால் ஆசிரியர்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.